செவ்வாய், 9 டிசம்பர், 2008

சின்ன சின்ன ஆசை...

சின்ன சின்ன ஆசை...
ரோஜா படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை பாடலை கேட்கும் போதும்,பார்க்கும் போதும் எனக்கும் நிறைய்ய,,சின்ன சின்ன ஆசைகள் இருபது தெரிய வந்தது..
என் சின்ன‌ சின்ன‌ ஆசைக‌ள்,
ம‌ழையில் ந‌னையாம‌ல் ந‌னைய‌ ஆசை..



ம‌ழை சேற்றில் மாட்டாம‌ல் வீடு சேர ஆசை..



ம‌ழை ஈரச்சாலையில் skid ஆகாம‌ல் வ‌ண்டி ஓட்ட‌ ஆசை..

ம‌ழை வ‌ரும்போது wiper போல helmet மாறி என் க‌ண்க‌ள் காக்க‌ ஆசை..

ம‌ழை நேர‌த்தில் அழுக்கு துணி சேராம‌ல் இருக்க‌ ஆசை..

அதே ம‌ழை நேர‌த்தில் துவைத்த‌ துணி நப்பில்லாம‌ல் காய‌ ஆசை...



ம‌ழை த‌ண்ணீர் சுவைத்தும் ச‌ளி பிடிக்காம‌ல் இருக்க‌ ஆசை..





தேங்கிய‌ ம‌ழை நீரில் நான் விடும் க‌ப்ப‌ல் மூழ்காதிருக்க‌ ஆசை..
ஆசை ஆசை இன்னும் எத்த‌னையோ ஆசை...
சின்ன‌ சின்ன‌ ஆசை ம‌ழை நேர‌ ஆசை....















9 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\ம‌ழையில் ந‌னையாம‌ல் ந‌னைய‌ ஆசை..\\

உங்கள் ஆசையே கவிதையா இருக்கே ...

நட்புடன் ஜமால் சொன்னது…

\\ம‌ழை நேர‌த்தில் அழுக்கு துணி சேராம‌ல் இருக்க‌ ஆசை..\\


ஹா ஹா ஹா

பல தங்கமணிகளின் ஆசை ...
சில ரங்கமணிகளுக்கும் தான்

நட்புடன் ஜமால் சொன்னது…

\\அதே ம‌ழை நேர‌த்தில் துவைத்த‌ துணி நப்பில்லாம‌ல் காய‌ ஆசை...\\

இது ... இது ... இது ஆசையல்ல

நப்-பாசை

(யாருக்கில்ல நப்பாசை - அதுவும் ஜரிதேன்)

நட்புடன் ஜமால் சொன்னது…

\\ம‌ழை த‌ண்ணீர் சுவைத்தும் ச‌ளி பிடிக்காம‌ல் இருக்க‌ ஆசை..\\

சளிக்கு ரொம்ப பிடிக்குமே ...

பாவம் அதுக்கும் சின்ன சின்ன ஆசை இருக்க தானே செய்யும்

நட்புடன் ஜமால் சொன்னது…

\\ஆசை ஆசை இன்னும் எத்த‌னையோ ஆசை...சின்ன‌ சின்ன‌ ஆசை ம‌ழை நேர‌ ஆசை....\\


எங்களுக்கும் தாங்க

நீங்க இன்னும் இன்னும் எழுதனும்

அதை நாங்க எல்லோரும் படிக்கனும்

இது எங்க வலை நேர ஆசைங்கோ ...

நித்தி .. சொன்னது…

rommmmmmmmmmba nari athirai!!!1

Divya சொன்னது…

அழகான ஆசைகள்:))

ரொம்ப க்யூட்டா எழுதியிருக்கிறீங்க!

நித்தி .. சொன்னது…

அழகான ஆசைகள்:))

ரொம்ப க்யூட்டா எழுதியிருக்கிறீங்க//

romba thanks divya..
nan unga blog pathu pathu asandhu poi irukiraen...

நித்தி .. சொன்னது…

//அதிரை ஜமால் கூறியது...
\\அதே ம‌ழை நேர‌த்தில் துவைத்த‌ துணி நப்பில்லாம‌ல் காய‌ ஆசை...\\

இது ... இது ... இது ஆசையல்ல

நப்-பாசை

(யாருக்கில்ல நப்பாசை - அதுவும் ஜரிதேன்)//

எப்படிங்க இப்படியெல்லாம் யோசிக்கறிங்க....

super...! நன்றி...