வெள்ளி, 3 ஜூலை, 2009

நிரு வின் நீங்காத‌ ப‌க்க‌ங்கள்....

நிரு நீட்டமா நிருபமா... வீட்ல கடை குட்டி ரொம்ப செல்லம் அம்மாக்கு, அண்ணன்களுக்கு குறிப்பா அப்பாக்கு....வயசு 19 ஆனாலும் அப்பா கழுத்தை கட்டிகிட்டு தான் இன்னும் நிரு‍ க்கு தூக்கம்...
நிருவை பொருத்த‌வ‌ரை எல்லாரும் ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ங்க‌...

எல்லார்கிட்டையும் ஏதொ ஒரு ந‌ல்ல‌ விச‌ய‌ம் இருக்கும் என்ற‌ ந‌ம்பிக்கை.தான் ஏமாத்த‌ ப‌ட‌றோம் அப்ப‌டி‍னு தெரிஞ்சே ஏமாருவா,இல்ல‌ ஏமற மாறி ந‌டிப்பா..கேட்டா.. "ப‌ர‌வாயில்ல‍பா நான் ஏமாறனால‌ ஒருத்த‌ருக்கு சந்தோஷ‌ம்னா அது என‌க்கும் சந்தொஷ‌ம்தான்".அப்படினு தான் எப்பவும் சொல்லுவா
இப்ப‌டி ஒரு ம‌ன‌ நிலை ந‌ம்ம‌ நிருக்கிட்ட‌ இருக்க‌ற‌னால‌ நிருவொட‌ அம்மாக்கு எப்ப‌வுமே ம‌ன‌சுக்குள்ள ஒரு ப‌தை ப‌தைப்பு... எங்க‌ ந‌ம்ம‌ புள்ள‌ இளிச்ச‌வாய் த‌ன‌மா இருந்து யாராவ‌தும் அவ‌கிட்ட‌ advantage எடுத்துக்க‌வா களோனு...
ம‌த்த‌ப‌டி ந‌ம்ம‌ நிரு ரொம்ப‌ generous.ரோட்ல‌ யாராவ‌தும் வ‌ண்டில‌ சின்ன‌ accident ஆனா கூட‌ முத‌ல் ஆளா உத‌வி செய்ய‌ ஓடி வ‌ருவா...
எல்லார் கிட்ட‌யும் எப்போதும் ஒரு சிரிப்போட‌ தான் வ‌ல‌ம் வ‌ருவா..அத‌னாலயே எல்லாரும் நிருகிட்ட‌ ரொம்ப‌ comfortable ஆ feel பண்ணு வாங்க... பேச‌,த‌ங்க‌ளோட‌ ம‌ன‌ க‌ஷ்ட‌ங்க‌ள share பண்ண‌... இதுக்கு வ‌யசு வித்யாச‌மே கிடையாது..ப‌க்க‌த்து வீட்டு 5 வ‌ய‌சு சீனு ல‌ இருந்து, நிரு வீட்ல‌ வேலை பாக்க‌ற‌ 45 வ‌ய‌சு சாந்தா அம்மா வ‌ரைக்கும்...அவ‌ள‌ பொருத்த‌ வ‌ரைக்கும் every person should be treated as human being but not எ servant,vendor,neighbour .இத‌னால‌ தான் ந‌ம்ம‌ நிரு எல்லார்க்கும் favorite...
ஆனா அவ‌ ம‌ன‌சுக்குள்ள யார்கிட்ட‌யும் சொல்ல‌ முடியாத‌ சொல்லாத‌ ஒரு விச‌ய‌ம் மித‌ந்துகிட்டே இருக்கு சுமார் 4 வ‌ருஷ‌மா...


- நிரு வின் ப‌க்க‌ங்க‌ள் தொட‌ரும்.....

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

:}