வியாழன், 25 டிசம்பர், 2008

நாய் குட்டி வள‌த்துங்க‌...

செல்ல நாய் குட்டிகளின் மூக்குநுனி ஜில்லிப்பில் மயங்கி போய் அவைகளின் தீவிரவாதி ஆனேன்...!! பின்ன, நாய் குட்டிகளை எங்கே பார்த்தாலும் உடனே கடத்த என் மனம் துள்ளுகிறதே...("ஆள் கடத்தல்‍‍‍‍ தீவிரவாதம் "-எங்கோ படித்தது....)





அவைக‌ளின் சின்ன‌ வால் துள்ள‌ல் எங்கோ என் ம‌ன‌துக்குள் குதித்து,குதித்து..குள்ளா போடுகிற‌து இந்த‌ ப‌னி கால‌ குளிருக்கு இத‌மாய்.

அவைகளின் ஊசிப்ப‌ல் செல்ல‌ க‌டியில் சிறு ப‌ய‌த்தோடு கூடிய‌ பெரும் சிலிர்ப்பு எனக்கு..



என் கால் த‌ட‌ங்க‌ளின் ஊடே,ஊடே நுழைந்து அவை செய்யும் சேட்டை என்னை த‌டுக்கி விழாம‌ல் நடை ப‌ழ‌க‌ செய்கிற‌து..








என் கால் மீது தலை வைத்து அது துயில் கொள்ளும் அழ‌கு,கொள்ளை அழ‌கு.. காலை அசைக்க‌ தோன்றாம‌ல்,கண் இமைக்க‌ முடியாம‌ல் நான் உதிர்த்த‌ புன்ன‌கை என்னை ,என்னையே ர‌சிக்க‌ வைத்த‌து...




என் அம்மா திட்ட‌ திட்ட‌,அத‌னோடு ம‌ண் புழுதியில் நான் அழுக்கான‌ நிமிட‌ங்க‌ள்.. ப‌ளிச் சுத்த‌மாய் என் நினைவில்...





என் ம‌டியில் நான் வைத்து பிரிய‌ம் காட்ட‌..செல்ல‌ கொஞ்ச‌ல் எனை கொஞ்சி தாவி எனை முக‌ர்ந்த‌ அதன் பிரிய‌ம்,என் பிள்ளை வ‌ந்தும் ஈடு செய்யுமா... ச‌ந்தேக‌மே...















நிஜமா சொல்றேன் ...

நாய் குட்டி வள‌த்துங்க‌...

வாழ்கை ர‌ச‌னை ஆகும்....!!!!












00000000000000
00

9 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஹா ஹா ஹா

MSK / Saravana சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. :)

MSK / Saravana சொன்னது…

தீவிரவாதி???????????

MSK / Saravana சொன்னது…

எனக்கு pet animals பிடிக்காது..

இதுவரை வளர்த்ததும் இல்லை..

மகி சொன்னது…

உண்மை
நாய்க்குட்டி வளர்ப்பது நம்மையும் சுறுசுறுப்பாக வைக்கும்.
அவைகள் குழந்தைகளிடம் பழகும் விதமே அலாதியானது.

கலாட்டா அம்மணி சொன்னது…

உங்க பதிவிலுள்ள நாய்குட்டி படங்கள் அத்தனையும் கொள்ளை அழகு.

எங்க வீட்டிலேயும் ஒரு வாலு பையன்(நாய்குட்டி) இருக்கான்...
எனக்கும் நாய் குட்டிகள்னா ரொம்ப பிடிக்கும்.

butterfly Surya சொன்னது…

மொழியில்லாத செல்ல பிராணிகளின் அன்பு அலாதியானது.

வார்தைகள் அற்ற சொற்களே மனதின் மொழி...அதுவே தியானம் என்பார் என் குரு ஒஷோ.

பதிவும் படங்களும் அருமை.

வாழ்த்துக்கள்.

நித்தி .. சொன்னது…

கடையம் ஆனந்த் கூறியது...
ஹா ஹா ஹா

he he he.....

நித்தி .. சொன்னது…

Saravana Kumar MSK கூறியது...
தீவிரவாதி???????????
amamam nai kuttigalai kadathum theeviravaathi...!