திங்கள், 24 நவம்பர், 2008

பார்வை ஒன்றே போதுமே.....

பார்வை ஒன்றே போதுமே.....
இந்த தலைப்ப பாத்தவுடனே எதோ காதல் கதையோன்னு நினைசுராதிங்க ...
ஒருத்தரோட பார்வையை வச்சே அவங்களோட குணாதியசத்தை நிர்ணயிக்க முடியும் னு பலர் சொல்லி கேட்டுருகேன்...
அதிலையும் பெண்களுக்கு இந்த தன்மை ரொம்ப இருக்குமாம் .ஒரு ஆண் தன்னை பார்க்கும் முதல் பார்வையிலேயே அவன் எப்படி பட்டவன் அப்படிங்கற
ஓரளவு ஐடியா கிடைக்கும் .
ஆனா இந்த opinion எல்லாம் சில நேரங்கள்ல தப்பாவும் போறதும் உண்டு...
இப்போ எதுக்கு இதையெல்லாம் சொல்றேன்னு பாக்கறிங்களா?
என் தோழி ஒரு இன்சிடென்ட் சொன்னா...அவளுக்கு சில ஆண்கள் பார்க்கும் பார்வையை சகிச்சிக்க முடியல...
எவ்வளவு தான் decent ஆ டிரஸ் பண்ணாலும் அவங்களோட வக்கிரமான பார்வை எப்பவும் பெண்களோட க‌ண்க‌ளை பார்த்து பேசாம‌ல் உட‌லை ம‌ட்டுமே உடுருவி மேலும் ச‌ங்க‌ட‌ ப‌டுத்துவ‌தாக‌ ரொம்ப‌வே நொந்து கொண்டாள்...
இது அவளுக்கு ம‌ட்டும் இல்ல‌ பெருபாலும் எல்லா பெண்க‌ளும் ச‌ந்திக்கும் ஒரு விச‌ய‌மே.... ஆனா இதை த‌விர்க்க‌ இன்னும் என்ன‌ வ‌ழினு தான் தெரிய‌ல‌..
இன்னும் இதுல‌ வருத்த‌ ப‌ட‌ வேண்டிய‌ விச‌ய‌ம் என்ன‌ன்னா, ப‌ல‌ நாட்க‌ள் கூட‌ ப‌ணி செய்யும் ந‌ண்ப‌ர்க‌ளே இப்ப‌டி செய்யும் போது இத‌ன் வ‌ருத்த‌ம் இன்னும் அதிக‌ம் ஆகுது...அவ‌ர்க‌ளிட‌ம் இந்த‌ த‌வ‌ரை சுட்டி காட்ட‌வும் முடியாம‌..இதை த‌விர்க‌வும் முடியாம‌ ரொம்ப‌வே ம‌ன‌ உலைச்ச‌ளுக்கு த‌ள்ளப‌டுராங்க‌... இந்த‌ மாதிரி situation அ எப்ப‌டி ஹ‌ன்டில் ப‌ண்ர‌து????

11 கருத்துகள்:

MSK / Saravana சொன்னது…

Me the first.. :)

MSK / Saravana சொன்னது…

பிழைகள் ரொம்ப இல்லையே.. :))கலக்கறீங்க..

நித்தி .. சொன்னது…

Saravana Kumar MSK கூறியது...
பிழைகள் ரொம்ப இல்லையே.. :))கலக்கறீங்க..

ellam unga asirvaatham ji...!!! :)

MSK / Saravana சொன்னது…

சமீபத்தில் படித்த Body Language புத்தகத்திலிருந்து இரு தகவல்கள்..

1. பொண்ணுகளுக்கு பசங்களை விட Sensing power or reading the eyes power அதிகம்.. அல்லது மிக அதிகம்..

2.மட்டுமல்லாது.. பசங்களின் விட பெண்களின் view coverage of the eyes மிக அதிகம்..
[வீடுகளில் பொதுவாக கணவர்கள் கண்ணாடி, Key முதலியவற்றை தேடி தேடி அலுத்து போய், மனைவியிடம் கேட்கும்போது மனைவி சில நொடிகளில் தேடி கண்டுபிடித்து தர முடிவதன் காரணம் இதுவே.. ]

பெண்களால் கண்களை பார்த்து பேசும் போதே எதிரே இருப்பவர்களின் almost முழு உருவமும் அவர்களின் கண்களில் அடங்குமாம்..

பசங்களுக்கு அப்படி இருப்பதில்லை.. நீங்கள் குறிப்பிட்ட incident-இல் தகவல் ஒன்றின் படி மாட்டி கொள்கிறார்களாம்..

MSK / Saravana சொன்னது…

நீங்கள் குறிப்பிட incident உலகம் முழுதும் இருப்பது.. இனகவர்ச்சியை தாண்டி வேறெந்த காரணமும் கிடையாது.. [இருபாலருக்கும் இது பொருந்தும்]..

உடலை, இனகவர்ச்சி தாண்டி பார்க்ககூடிய தெளிவு வரவேண்டும்.. வருமா என்பது கேள்வி.. [இருபாலருக்கும் இதுவும் பொருந்தும்]..

MSK / Saravana சொன்னது…

//நித்தி .. கூறியது...
ellam unga asirvaatham ji...!!! :)//

இதெல்லாம் ஓவரு..

MSK / Saravana சொன்னது…

//இந்த‌ மாதிரி situation அ எப்ப‌டி ஹ‌ன்டில் ப‌ண்ர‌து???? //

எனக்கு தெரியலங்க.. இதற்கு யாராவது பொண்ணுங்க தான் பதில் சொல்லணும்..

பிரியமுடன்... சொன்னது…

நித்தியா...இதுக்கு கருத்து கூறுவது கடினம்! பெண்களிடம் கேட்டால் ஆண்களை தூற்றி கருத்து கூறுவார்கள். ஆண்களிடம் கேட்டால் பெண்களுக்கு சாதகமாக பேசுவதுபோல பொய்யாக தகவல் தருவார்கள், எனவே தகுந்த கருத்து கிடைப்பது கஷ்டம், நானும் ஒரு ஆண்தான் எனவே என் கருத்துக்களையும் தருகிறேன், இதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்.

தன்னை பார்கவேண்டும் என நினைகும் பெண்களும் உண்டு!
அத்துமீறி பார்க்கும் ஆண்களை அருவருப்பாக பார்க்கும் பெண்களும் உண்டு!
அடுத்தவர்கள் தன்னை பார்கிறார்களா இல்லையா என்பதை பற்றி கவலைப்படாமல் தன் வேலையை மட்டும் பார்க்கும் பெண்களும் உண்டு!
எனவே பெண்களுக்கு பெண்கள் இது மாறுபடும். அதேபோல் ஆண்களுக்கு ஆண்கள் இதன் அளவுகோல் மாறுபடும் அவ்வளவுதான், உதாரணத்திற்கு என்னையே எடுத்துக்கொள்ளுங்கள், அழகான பெண்கள் எதிரே வந்தால் ஒரு கணம் பார்கத்தான் செய்கிறேன். பதிலுக்கு அந்த பெண் பார்த்தால் என் பார்வையின் அவளிடமிருந்து மீட்டுகொள்கிறேன், அந்த பெண் பார்காத நிலையில் அவரிடம் எதை பார்கிறோம் என்பதெல்லாம் அவர் அவர் எண்ணங்களை பொறுத்தது!

உங்களுக்கு நான் சொல்ல வருவதெல்லாம், ஆண்களை சந்திக்கும்போது, அவர்களூடைய பார்வை தவறான் இடங்கள் நோக்கி செல்லாத வண்ணம் நாகரீக ஆடைகளை அணிவது நல்லது! அல்லது தமிழ் பண்பாடுமிக்க பெண்களுக்கு நன்றாகத் தெரியும் தன்னை எப்படி தற்காத்துகொள்ளவது என்று! எனவே உங்களை தற்காத்துக்கொள்ளுங்கள். அகில உலக ஆண்கள் எல்லோருமே அப்படித்தான்! நீங்கள் வேண்டுமென்றால் உங்களையுடைய எண்ணங்களிலிருந்து சற்று விலகி வாருங்கள். நன்றி! தவறாக எதேனும் குறிப்பிட்டுருந்தால் மன்னிக்கவும்!! எல்லா பெண்களுமே அழகுதான் அவர்கள் அழகாக நடந்துகொள்ளும் வரை! எல்லா ஆண்களுமே நல்லவர்கள்தான் கெட்ட புத்திக்கு பெண்கள் இடம் தராதவரை!!

மொக்கைச்சாமி சொன்னது…

பொதுவாவே கண்களைப் பார்த்து பேசறது கொஞ்சம் கடினம். முக்கியமா பெண்களின் கண்களுக்கு பவர் (வசீகரம்?) ஜாஸ்தி. பசங்க (including me) சில சமயம் க்ளோஸ் friends (who are girls) ஆகயிருந்தாலும் கண்கள் பார்த்து பேச கஷ்டப்படுவாங்க. இதனாலையும் இருக்கலாம்.
(வேண்டுமென்றே உடலை பார்த்து பேசறாங்கன்னா, அது தவறு தான். வேண்டுமென்றே அப்படி பார்க்கறாங்கன்னு தெரிஞ்சா, மறைமுகமா சுட்டிக் காட்டலாம் like "என்னை பார்த்து பேசுங்க, ஏன் எங்கயோ பார்க்கறீங்க?". முக்கியமா சிரிச்சிக்கிட்டே காமெடி tone'ல சொல்லுங்க. புரிஞ்சிக்கிப்பாங்க)
நிறைய எழுத வாழ்த்துக்கள்.

நித்தி .. சொன்னது…

வேண்டுமென்றே உடலை பார்த்து பேசறாங்கன்னா, அது தவறு தான். வேண்டுமென்றே அப்படி பார்க்கறாங்கன்னு தெரிஞ்சா, மறைமுகமா சுட்டிக் காட்டலாம் like "என்னை பார்த்து பேசுங்க, ஏன் எங்கயோ பார்க்கறீங்க?". முக்கியமா சிரிச்சிக்கிட்டே காமெடி tone'ல சொல்லுங்க. புரிஞ்சிக்கிப்பாங்க)
நிறைய எழுத வாழ்த்துக்கள்.


romba thanks mokkai sir...varigaikum,ungal karuthukum...

நித்தி .. சொன்னது…

பிரியமுடன்... கூறியது...

yosikka pada vendita points...
varugaiku nanri...